புலம்பெயர் தொழிலாளர்கள் உபரகரணங்களை கொண்டு வர புதிய வரையறைகள் விதிக்கப்படவில்லை!

புலம்பெயர் தொழிலாளர்கள் உபரகரணங்களை கொண்டு வர புதிய வரையறைகள் விதிக்கப்படவில்லை!

புலம்பெயர் தொழிலாளர்  ​நாடு திரும்பும் போது அவர்கள் பயன்படுத்திய உபகரணங்களை எவ்வித தடையுமின்றி எடுத்து வர முடியும் என்று நிதியமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள் பணிகாலத்தை நிறைவு செய்து நாடு திரும்பும் போது எடுத்து வரும் உபகரணங்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த வரையறைகள் மாத்திரமே செல்லுபடியாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலத்திரனியல் பொருட்கள் உட்பட 621 பொருட்களின் இறக்குமதிக்கு மத்திய வங்கி தடை விதித்திருந்த நிலையில் அது தொடர்பில் போதிய விளக்கமின்றி பலர் பல கட்டுக்கதைகளை கிளப்பி விடுகின்றனர். வௌிநாடுகளில் இருந்து வருபவர்கள் வழமைப்போல் கொண்டு வரும் இனிப்புகள், தொலைகாட்சி போன்றவற்றையும் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக போலியான தகவல்கள் வௌியாகியுள்ளன. அவ்வாறு இல்லை. அவர்கள் ஏற்கனவே உள்ள விதிமுறைகளுக்கமைய பொருட்களை கொண்டு வர முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image