குவைத்தில் மீண்டும் கொவிட் தடுப்பு நடைமுறைகள் அமுலில்

குவைத்தில் மீண்டும் கொவிட் தடுப்பு நடைமுறைகள் அமுலில்

எதிர்வரும் ஒரு மாத காலத்திற்கு இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்த குவைத் அரசு தீர்மானித்துள்ளது. அத்துடன் வௌிநாட்டவர்கள் நாட்டுக்குள் நுழைவதற்கான தடை மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

உள்ளூர் செய்திகளுக்கமைய மாலை 5.00 மணி தொடக்கம் அதிகாலை 5.00 மணிவரை இவ்வூரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும். இந்நடைமுறையானது எதிர்வரும் 7ம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 8ம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்நாட்டு பொலிஸ் மற்றும் பாதுகாப்புப்படையின் உதவியுடன் இவ்வூரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இவ்வூரடங்கு நடைமுறையில் இருக்கும் சமயத்தில் பள்ளிவாசலுக்கு நடந்து செல்ல முடியும். இது தவிர மருந்தகங்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சந்தை போன்ற நாளாந்த நடவடிக்கைகளுக்கு செல்வதற்கான அனுமதி ங்கபபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஊரடங்கு நடைமுறையில் இல்லாத பகல் நேரங்களில் உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் என்பவற்றுக்கு நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. உணவுகளை வீடுகளுக்கு அழைப்பித்துக்கொள்ளவும் வாகனங்களில் இருந்து பெற்றுக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரு பயணிகள் மட்டுமே மோட்டார் வாகனத்தில் பயணிக்க முடியும். பொது மக்கள் அமர்ந்திருக்கக்கூடிய பொதுவிடங்கள் மற்றும் பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன.

Author’s Posts