லெபனான் வாழ் இலங்கையர்களுக்கான விசேட அறிவித்தல்

லெபனான் வாழ் இலங்கையர்களுக்கான விசேட அறிவித்தல்

இலங்கையர்களை தாய்நாட்டுக்கு அழைத்து செல்வதாக கூறி பண மோசடி செய்வது தொடர்பில் தூதரகத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக லெபனானுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

திட்டமிட்டு இம்மோசடியில் குழுவொன்று இம்மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் தொடர்ச்சியாக தூதரகத்திற்கு புலம்பெயர் இலங்கையர்கள் தொடர்புகொண்டு பணம் சேகரிக்கப்படுவதாகவும் தூதரகத்தினால் இவ்வாறு பணம் சேகரிக்கப்படுகிறதா? அதற்கான அரச அனுமதி உள்ளதா என்று வினவுவதாகவும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளதது.

இது தொடர்பில் கருத்து வௌியிட்ட வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் லெபனானில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களை தாய்நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நிதி சேகரிக்க எந்தவொரு தனிநபருக்கோ, அமைப்புக்கோ அனுமதி வழங்கப்படவில்லையென்றும் எனவே இவ்வாறு நிதி சேகரிப்பவர்களுக்கு பணம் வழங்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, லெபனானில் இருந்து இலங்கை வரும் விமானங்களை தரையிறக்குவதற்கு அனுமதி தேவையென இலங்கை சிவில் விமான ​சேவை அதிகாரசபை அறிவித்துள்ள நிலையில் சில விமான டிக்கட் பிரதிநிதிகள் பயணிகளுக்கு விமான டிக்கட்டுக்களை வழங்குகின்றனர் என்றும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது. பெய்ரூட் விமானநிலையமானது பயணிகளை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் விமானங்களுக்கான அனுமதி டிக்கட் (Boarding Pass) வழங்குவதை இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image