வௌிநாடுகளில் பணியாற்றி இலங்கையர்களின் சேமலாப நிதியத்தை பெற விசேட ஒப்பந்தம்

வௌிநாடுகளில் பணியாற்றி இலங்கையர்களின் சேமலாப நிதியத்தை பெற விசேட ஒப்பந்தம்

வௌிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களின் ஊழியர் சேமலாப நிதியத்தை இலங்கை சேமலாப நிதியத்தினூடாக வழங்குவதற்கான ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட எண்ணியுள்ளதாக தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இன்று (09) பாராளுமன்றில் தெரிவித்தார்.

இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் பல துறைகளில் இலங்கையர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுடைய ஊழியர் சேமலாப நிதிய நிதி அந்தந்த நாடுகளில் நீண்ட நாட்களாக வைப்பிலிடப்பட்டுள்ளன.

அந்த நாடுகளுடன் விசேட ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுவதனூடாக அவர்களுடைய சேமலாப நிதிய நிதியை இலங்கை ஊழியர் சேமலாப நிதியத்தினூடாக பெற்றுக்கொள்வது தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்களுக்கு தெரியப்படுத்தி செயற்படுத்துவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்திய உட்பட பல வௌிநாடுகளில் உள்ள இலங்கை நிறுவனங்களில் பணியாற்றிய இலங்கையர்கள் அவ்வவ்நாடுகளில் உள்ள சமூக பாதுகாப்பு நிதியத்தில் பங்களிப்பு செய்த நிதியை பெற முடியாத நிலையில் தொழில் திணைக்களத்தில் தொடர்ச்சியாக முறைபாடு செய்து வந்ததாக தகவல் வௌிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image