கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள், மீள பணிக்கு திரும்பும்போது, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு, தொழில் வழங்குநர் கோருவது, அடிப்படையற்றது என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவிததுள்ளார்.
முழுமையாக குணமடைந்து, வீடுகளுக்கு செல்லத் தகுதியானவர்கள் என வைத்தியர்களினால் தீர்மானிக்கப்பட்டு, வீடுகளுக்கு செல்பவர்கள், மீண்டும் பணியிடங்களுக்கு செல்லும்போது, தொழில் வழங்குநரினால் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளுமாறு கோரப்படுகின்றது.
இந்தக் கோரிக்கை தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்தும் நோய் பரப்பும் தன்மை இல்லாதமை காரணமாகவே, நோயிலிருந்து குணமடைந்தவர்கள், வைத்தியசாலைகளில் இருந்து வெளியேற்றப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவிததுள்ளார்.
ஏதாவதொரு காரணத்தினால், நோய் அறிகுறிகள் குறைவடையாவிட்டால், குணமடைந்த ஒருவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளும்போது தொற்றுறுதியாகுமாயின், அது செயலிழந்த வைரஸின் பாகங்கள் அவரின் உடலில் இருப்பதனால், ஏற்படும் நிலையாகும்.
அவ்வாறாக பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளவேண்டிய அவசியமில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மூலம் - சூரியன் எவ் எம் செய்திகள்