ILO தொழிலாளர் மாநாட்டில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பாராட்டு
வருடாந்த சர்வதேச தொழிலாளர் மாநாட்டில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் வருடாந்த சர்வதேச தொழிலாளர் மாநாடு ஜெனிவாவில் நடைபெற்று வருகின்றது.
இதில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கில்பர்ட் எப்.ஹூங்போ ஆகியோருக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச சம்பளம் 1,700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்தும் நடவடிக்கையின் போது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சமூக அபிவிருத்தி கொள்கையைப் பின்பற்றியமைக்காக அமைச்சர் மனுஷ நாணயக்காரவை சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் பாராட்டி உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.