தொழிலாளர்களின் தரவுகளை சேகரிக்க இலத்திரனியல் தொகுதி அமைக்க ILO உதவி
உழைக்கும் வர்க்கத்தின் இலத்திரனியல் தரவுத் தொகுதியை ஸ்தாபிப்பதற்கான உதவியை வழங்குமாறு உலக தொழிலாளர் அமையத்திடம் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
அமையத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் சீ சிங் மற்றும் தொழில் பிரிவின் சிரேஷ்ட நிபுணர் ஷர் வெரிக் ஆகியோரை அவர்களுடைய அலுவலகத்தில் பிரதமர் நேற்று (13) சந்தித்தபோது இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
கொவிட் தொற்று, பொருளாதார நெருக்கடி ஆகியவற்றின் தாக்கம், மற்றும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான செயற்பாடு, தொழிலாளர் மற்றும் குறை வருமானம் கொண்ட தொழிலாளர்களுக்காக முன்னெடுக்கப்படும் நீண்ட மற்றும் குறுகிய கால அரச திட்டங்கள் குறித்தும் இதன்போது பிரதமர் விளக்கமளித்தார்.