அதிபர் சேவை தரம் III ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பம் கோரல்

அதிபர் சேவை தரம் III ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பம் கோரல்

அதிபர் சேவை தரம் III இற்கு ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிவித்தலில்.

இலக்கம் 1885/31 மற்றும் 2014.10.22 திகதியிட்ட புதிய அதிபர் சேவை பிரமாணக்குறிப்பின்படி 2018/2019 மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து இலங்கை அதிபர் சேவையின் தரம் III இற்கு ஆட்சேர்ப்பு செய்தல் – இரண்டாம் கட்டம் (2023)

  1. இலங்கை அதிபர் சேவையின் சேவை பிரமாணக்குறிப்பிற்கு ஏற்ப இலங்கை அதிபர் சேவையின் தரம் III  இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக 2019.02.10 அன்று நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்ததன் பின்னர் 2019.07.29 முதல் 2019.08.08 வரை நடைபெற்ற பொது மற்றும் கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வில் பங்குபற்றிய அலுவலர்களின் பெயர் பட்டியல் அடங்கிய அட்டவணை அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
  2. மேலும், அதில் காட்டப்பட்டுள்ள https://recruitment.moe.gov.lk/1552/.அழந.டம என்ற இணைய இணைப்பிற்குச் சென்று உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைக் குறித்த பின்னர் உங்களின் தற்போதைய தனிப்பட்ட மற்றும் கடமைத் தகவல்களை 2023.05.30 க்கு முன்னர் உள்ளிடவும் வலியுறுத்தப்படுகிறது. மேலும் இதனுடன், கீழே உள்ள வலயக் கல்விப் பணிப்பாளரால் பூர்த்தி செய்யப்பட வேண்டிய படிவத்தைப் (இணைப்பு 01) பதிவிறக்கம் செய்து, தற்போதைய வலயக் கல்விப் பணிப்பாளரால் பூர்த்தி செய்து உறுதிப்படுத்தி 2023.05.30இற்கு முன்னர் கல்வி அமைச்சின் அதிபர்; கிளைக்கு கிடைக்கச் செய்ய வேண்டுமென தெரிவித்துக் கொள்கிறேன்.
  3. மேலும், இந்த ஆவணத்தில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளமையானது இலங்கை அதிபர் சேவையில் தரம் ஐஐஐ இற்குரிய நியமனம் பெறப்பட உரித்தானது என்பதை உறுதிப்படுத்தவில்லை என்பதை நான் வலியுறுத்துகிறேன்.

பெயர்ப்பட்டியல் மற்றும் விண்ணப்பம் என்பன கீழே உள்ள இணைப்பில் 

நேர்முகத் தேர்தவில் பங்கேற்ற அதிகாரிகளின் பெயர்ப்பட்டியல்

தகவல் கோரும் விண்ணப்பம்

 

மேலும் செய்திகள் அரச உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிக்கான விண்ணப்பம் கோரல்

பெருந்தோட்ட மக்கள் சார்பில் உலக வங்கியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

புதிய வரி அறவீட்டு முறைமை அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது

தொழில் சட்ட விவகாரம்: பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image