பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை Anti-Terrorism Act (ATA) அவசரமாக முன்வைக்கப் போவதில்லை என நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் கடந்த வௌ்ளிக்கிழமை கருத்து வௌியிட்ட அவர்,
சகல தரப்பினருடனும் கலந்துரையாடி, தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் குறித்த சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும். மக்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தும் சட்டமூலத்தை நாடாளுமன்றில் முன்வைக்கப் போவதில்லை.
நாட்டு மக்களின் அவசியத் தன்மைக்கு ஏற்பவே சட்டங்கள் உருவாக்கப்படும். அந்த சட்டம் தற்போது சட்டமூலமாக உள்ளது. எனினும் இதனை தொடர்ந்தும் ஆராய வேண்டுமென பல தரப்பினர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய அந்த சட்டமூலத்தை நாடாளுமன்றில் முன்வைக்கவில்லை.
எனவே, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான யோசனைகளை எழுத்துமூலம் முன்வைக்கவும் எந்தவொரும் தரப்பினரும் தங்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது
அத்துடன் பரந்த அளவிலான பல சுற்று பேச்சுவார்த்தைகளின் மூலம் அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்து அவசியமான திருத்தங்களை மேற்கொண்டதன் பின்னரே பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் - என்றார்.