வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு 93 வாக்கு வித்தியாசத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.


கடந்த 12 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு நிதி அமைச்சர் பெஸில் ராஜபக்ஷவினால் உரை நிகழ்த்தப்பட்டது.

வரவு செலவு திட்ட யோசனை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இன்று வரையில் 7 நாட்களுக்கு இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது.

இன்று வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது.

2022 வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆதரவாக 153 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் வழங்கப்பட்டிருந்தன,

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image