மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்களுக்கு கல்வி அமைச்சரின் விசேட அறிவித்தல்

மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்களுக்கு கல்வி அமைச்சரின் விசேட அறிவித்தல்

எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டால், அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம், அதற்காக நாடளாவிய ரீதியில் 10 ஆயிரம் பாடசாலைகளை மூடவேண்டி ஏற்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று முற்பகல் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோது கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறிருப்பினும், பரீட்சையைப் பிற்போடுமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள், பரீட்சைகள் திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.

உயர்தரப் பரீட்சைக்குத்ட தயாராவதற்காக, குறைந்த இரண்டு மாதங்கள் காலஅவகாசம் வழங்குமாறு மாணவர்கள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக்க பிரேமரத்ன சபையின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

இதன்போது பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நீங்கள் கூறுவது போன்ற பிரச்சினை, இரண்டாம் மற்றும் மூன்றாம் முறை பரீட்சைக்குத் தோற்றுபவர்களுக்கு உள்ள பிரச்சினையாகும் என குறப்பிட்டார்.

இதற்கு முன்னரும், இரண்டாம் மற்றும் மூன்றாம் முறை பரீட்சைக்குத் தோற்றியவர்களுக்கு மூன்று மாதங்களும், இரண்டு கிழமையும் என்ற கால அவகாசமே கிடைத்தது. ஒட்டுமொத்த பாடசாலை நேர அட்டவணையைக் கருத்திற்கொண்டே, பரீட்சைகள் நடத்தப்படுகின்றன. உயர்தரப் பரீட்சை நேர அட்டவணைக்கு அமைய, அந்தப் பரீட்சையை முழுமையாக நடத்தி முடிக்க 28 நாட்கள் எடுக்கும். அதாவது ஒருமாத காலமாகும். இதற்கமைய, இரண்டு வாரங்கள் பிற்போடப்பட்டே, டிசம்பரில் பரீட்சையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 41 இலட்சம் மாணவர்களுக்கு விடுமுறை என்ற காரணத்தினாலேயே, நவம்பரில் இருந்து டிசம்பர் மாதத்திற்கு பரீட்சை பிற்போடப்பட்டது. அந்த மாணவர்களுக்குரிய காலம் வீணாகாது.

இந்த நிலையில், ஏதே ஒரு வகையில், பரீட்சையை இரண்டு மாதங்கள் பிற்போட்டு, பெப்ரவரி மாதம் நடத்தினால், பாடசாலை நேர அட்டவணையுடன் முரண்நிலை ஏற்படும். அப்போது 10 ஆயிரம் பாடசாலைகளை மூடவேண்டி ஏற்படும். 2 ஆயிரத்து 800 மத்திய நிலையங்களை அமைக்க வேண்டும். அதேநேரம், இரண்டு பரீட்சைகளுக்கு இடையிலான இடைவெளி குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும். பெப்ரவரி மாதத்திற்கு உயர்தரப் பரீட்சையை பிற்போட்டால், 41 இலட்சம் மாணவர்களுக்கு ஒருமாத கால பாடசாலைக் கல்வி இல்லாதுபோகும்.

அத்துடன், சாதாரண தரப் பரீட்சையை ஏப்ரல் மாதம் நடத்த முடியாமல் போகும். ஏனெனில், உயர்தரப் பரீட்சையை நடத்திவிட்டு, உடனடியாக சில வாரங்களில் விடைத்தாள்களைத் திருத்த வேண்டிய நிலை ஏற்படும். எனவே, பரீட்சைகள் திணைக்களம் நிர்ணயிக்கும் காலத்தில் மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுவதைத் தவிர்த்து, இவ்வாறான கோரிக்கைகளை முன்வைக்கப்படவில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image