சுகாதார அமைச்சில் 8 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து அவர்களுடன் தொடர்புடைய 77 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சினது இரண்டு பிரிவுகளில் இந்த கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.