கொத்மலை தனியார் ஆடைத்தொழிற்சாலையில் 69 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொத்மலை பகுதியில் இயங்கும் தனியார் ஆடைத்தொழிற்சாலையொன்றில் 69 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து கொரொனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அந்த ஆடைத்தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மேற்படி ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் 799 ஊழியர்களுக்கு மத்தியில் நடத்தப்பட்ட ரெபிட் என்டிஜட்ன் பரிசோதனையில் 69 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் வழங்கிய ஆலோசனையின் பிரகாரமே தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இத்தொழிற்சாலையில் நுவரெலியா, கொத்மலை, புஸல்லாவை, ராவணாகொட, பூண்டுலோயா மற்றும் நாவலப்பிட்டிய பகுதிகளில் உள்ளவர்கள் தொழில்புரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.