கட்டுமானப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக 600,00 தொழிலாளர்களின் பொருளாதாரம் பாதிப்பு

கட்டுமானப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக 600,00 தொழிலாளர்களின் பொருளாதாரம் பாதிப்பு

கட்டுமானத்துக்காக பயன்படுத்தப்படும் சீமேந்து உட்பட ஏனைய மூலப்பொருட்களின் விலையேற்றத்தினால் 600,000 இற்கும் அதிகமான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என்று இலங்கை தேசிய நிர்மாண சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அச்சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராய்ச்சி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் மிகக் குறைந்த பொருளாதார வசதிகளைக் கொண்ட சுமார் 1.2 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் கட்டுமானத் துறையில் பணிபுரிகின்றனர். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக கட்டுமானத் தொழில் 50% வீழ்ச்சியடைந்துள்ளது எனவே, அவர்களில் 600,000 க்கும் அதிகமானோர் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

இதற்கு முக்கிய காரணம் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்படும் சிமேந்து உட்பட மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகும்

ஒரு தொன் இரும்பின் விலை 288,000 ரூபாவில் இருந்து 300.000 ரூபாவாக அதிகரித்துள்ளது. முதலில் வாங்கி களஞ்சியப்படுத்தியிருந்த இரும்பும் தற்போது அதிகரித்த விலைக்கே விற்கப்படுகின்றன. அத்துடன் சீமேந்து வரை ஜனவரி மாதம் 100 ரூபாவால் அதிகரித்தது. பெப்ரவரி மாதம் 125 ரூபாவால் அதிகரித்தது. இம்மாதம் 350 ரூபாவால் அதிகரித்துள்ளது. தற்போது ஒரு பைக்கற் சீமேந்தின் விலை 1,900.00 ரூபாவாகும். இதேபோன்று ஏனைய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. அவற்றை கொள்வனவு செய்வது எவ்வாறு என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

ஹம்பாந்தோட்டையில் புதிய சீமேந்து தொழிற்சாலையை திறப்பதற்கு பெரும் விளம்பரம் செய்யப்பட்ட போதிலும், குறித்த தொழிற்சாலையில் இருந்து இதுவரை ஒரு சீமேந்து மூட்டை கூட சந்தைக்கு விடப்படவில்லை. நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நேரத்தில் கட்டுமானத் தொழில் வீழ்ச்சியடைந்ததற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் நிர்வாகக் குறைபாடுதான் மிக முக்கிய காரணம்

இதற்கு முன்னர் ஒரு தடவை கட்டுமானப் பணிகளுக்கு சீமேந்து குறைப்பாடு நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான அமெரிக்க டொலர் தட்டுப்பாடு காரணமாக, கட்டுமானத் தொழிலுக்குத் தேவையான மூலப்பொருட்கள் உட்பட பல இறக்குமதிகள் தடைப்பட்டுள்ளன. கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான சீமேந்து உட்பட பல பொருட்களை வாங்குவதற்கு ஹார்ட்வெயார்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைக் காணலாம்.

த மோர்னிங்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image