தனியார்துறை ஊழியர்கள் வயதை 60 ஆக மாற்ற நடவடிக்கை

தனியார்துறை ஊழியர்கள் வயதை 60 ஆக மாற்ற நடவடிக்கை

தனியார் துறை ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60 ஆக மாற்ற தொழில் அமைச்சுநடவடிக்கை எடுத்துள்ளது,

சட்டரீதியாக ஓய்வு பெறும் வயதை உள்வாங்குவதற்கு அரசியலமைப்பில் இடமளிக்கப்படவில்லை என்று சட்ட மா அதிபருடைய அறிக்கையும் பெறப்பட்டுள்ள நிலையில் சட்ட வரைவாளரினால் தயாரிக்கப்பட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டிய ஊழியர்களின் சேவை முடிவுறுத்தலுக்கான சட்டத்தினை வர்த்தமானியில் வௌியிட்டதன் பின்னர் அனுமதிக்காக பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் திகதிக்கு 55 வயது நிறைவடைந்த ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது 57 வரையிலும் 52 வயதுக்கு குறைந்த ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது 60 ஆகவும் சட்டமூலத்தில் திருத்தங்கள் செய்து வௌியிடப்படவுள்ளது.

தனியார் துறையில் பணியாற்றி வந்த ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது இதற்கு முன்னர் 55 ஆக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image