2016 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய தேசிய குறைந்தபட்ச வேதனம் 12,500/- ஆக விதிக்கப்பட்டுள்ளது. தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையின் விதந்துரைகளின் பிரகாரம் நியமிக்கபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் தருநர்களையும் உட்சேர்த்து முத்தரப்பு உபகுழுவொன்றின் மூலம் குறித்த வேதனத்தை 17,500/- வரை அதிகரிப்பதற்கு விதந்துரைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறைந்தபட்ச வேதனம் 12,500/-. ரூபாவிலிருந்து 17,500/- ரூபா வரை 5,000/- ரூபாவால் அதிகரிப்பதற்கும் மற்றும் குறைந்தபட்ச தேசிய நாளாந்த வேதனம் 500/- ரூபாவிலிருந்து 700/-ரூபா வரை 200/- ரூபாவால் அதிகரிப்பதற்கு இயலுமாகும் வகையில் 2016 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.