கிழக்கு மாகாணத்தில் அதிபர் தரம் 3 ஐ நிறைவு செய்த 499 பேருக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நியமனங்கள் வழங்கும் நிகழ்வு திருகோணமலை இந்துக் கலாசார மண்டபத்தில் நேற்று (06) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.