அரச சேவை தொடர்பில் முன்மொழிவுகளை தயாரிக்க நிபுணர்கள் கொண்ட உபகுழு

அரச சேவை தொடர்பில் முன்மொழிவுகளை தயாரிக்க நிபுணர்கள் கொண்ட உபகுழு
ஒட்டுமொத்த அரசாங்க சேவையையும் திறந்த மற்றும் பொறுப்புக் கூறக்கூடிய நிலைமைக்குக் கொண்டுவரும் நோக்கில் வழிகாட்டல் முன்மொழிவுகளைத் தயாரிக்க நிபுணர்களைக் கொண்ட உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது.
 
அரசாங்க சேவையை மிகவும் வினைத்திறன் மிக்கதாகவும், பொதுமக்களுக்குப் பொறுப்புக் கூறக்கூடிய நிலைக்குக் கொண்டுசெல்லவும், ஒட்டுமொத்த நிறுவன மற்றும் அரசாங்கத்தை திறந்த மற்றும் பொறுப்புக்கூறக்கூடிய நிலைக்குக் கொண்டுசெல்லக் கூடிய வழிகாட்டல் முன்மொழிவுகளைத் தயாரிப்பதற்கு நிபுணர்களை உள்ளடக்கிய உப குழுவொன்றை நியமிப்பதற்கு வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
 
வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத்குமார சுமித்திராரச்சி தலைமையில் கூடியபோதே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
 
May be an image of 3 people, dais and text that says "Chairman ©Parliamen Parliame"
 
May be an image of 8 people, people studying and text
 
அரசாங்க சேவை மற்றும் அரசாங்க ஊழியர்கள் மிகவும் உகந்த, மக்கள் சார்ந்த அரசாங்க சேவையை உருவாக்குவதற்கும், ஜனநாயகம், நல்லாட்சி, செயலாற்றுகை, மனமுவந்த தன்மை மற்றும் பொறுப்புக்கூறும் தன்மை உறுதிப்படுத்தக்கூடிய அரசாங்க சேவையை உருவாக்குது தொடர்பில் முன்மொழிந்து, தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்தக் கூடிய வழிகாட்டல்களைத் தயாரிப்பதற்கு இவ்வாறு புத்திஜீவிகள் மற்றும் நிபுணர்களைக் கொண்ட உபகுழுவை நியமிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.
 
இந்த உபகுழுவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 21 பேர் உள்ளடங்குகின்றனர். இதற்கு அமைய இந்த உபகுழுவின் தலைவராக துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர் உதயன கிரிந்திகொட நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இந்த உபகுழுவில் நிபுணர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், பொதுநிர்வாக நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், நிதி அமைச்சின் செயலாளர், வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, கொழும்பு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் எச்.டி.கருணாரத்ன, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் பிரியங்க துனிசிமா, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வர்த்தக மற்றும் பொருளாதாரக் கற்கைகள் பிரிவின் தலைவர் பேராசிரியர் ஜானக பெர்னாண்டோ, தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் எம்.கே.எஸ்.ரத்நாயக்க, ஊடகவியலாளர் அசோக டயஸ் (சிரச ஊடக வலையமைப்பு), பஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான அமைப்பின் தலைவர் மஞ்சுள கஜநாயக்க, சர்வோதய இயக்கத்தின் தலைவரும், இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவருமான வைத்தியகலாநிதி வின்யா ஆரியரத்ன, குழுவின் தலைவரின் ஆலோசகர் கலாநிதி கே.எ.திலகரத்ன ஆகியோர் அடங்குகின்றனர்.
 
 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image