சுகாதாரத் துறையில் ஊழல், மோசடிகளை இல்லாதொழிக்கும் முறைமையை தாயரிக்க பிரதமர் இணக்கம்
சுகாதாரத்துறையில் இடம்பெறும் ஊழல், மோசடி மற்றும் வீண்விரயங்களை தடுப்பதற்கான அமைப்பை உருவாக்குதல் தொடர்பான குழு முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதுடன்,
அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, எதிர்காலத்தில் விசேட கலந்துரையாடலொன்றை நடத்தி வேலைத்திட்டமொன்றை தயாரிக்க நிறைவுகாண் மருத்துவ நிபுணர்களின் ஒன்றிணைந்த சபைக்கும், பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இடையில் நேற்று (11) இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு குழுவையும் தனித்தனியாக தெரிவு செய்வதன் மூலம் சம்பளத்தை அதிகரிப்பதில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் குறித்து விரிவாக சுட்டிக்காட்டப்பட்டதுடன், ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுகோல்களின் அடிப்படையில் தேசிய சம்பளக் கொள்கையை உருவாக்குவதன் அவசியம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.