2020 முதல் அதன் பின்னர் பட்டம் பெற்று தொழில் வாய்ப்பு இல்லாத தொழிலற்ற பட்டதாரிகளின் பிரச்சினை குறித்து பொது நிர்வாக அமைச்சு இதுவரையில் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தவில்லை என ஒன்றிணைந்து வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் இணைப்பாளர் தென்னே ஞானாநந்த தேரர் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் வினவுவதற்காக ஒன்றிணைந்து வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் இணைப்பாளர் தென்னே ஞானானந்த தேரர் மற்றும் ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் மத்திய நிலையத்தின் செயலாளர் தம்மிக முனசிங்க ஆகியோர் பொது நிர்வாக அமைச்சு நேற்று (16) சென்றிருந்தனர்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது ஒன்றிணைந்த ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் இணைப்பாளர் தென்னே ஞானாநந்த தேரர் குறித்த விடயத்தை தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,
45 வயதுக்கு மேற்பட்ட தொழிலற்ற பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பில் அவர்கள் தொடர்ந்தும் ஒரே நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர். அதாவது அமைச்சரவைத் தீர்மானமும் அல்லது ஜனாதிபதியும் பிரதமர் தலையிட்டு இது தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தை அமைச்சரவைக்கு அனுப்பினால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும் என்று அமைச்சு இன்றும் தெரிவித்தது.
இதேநேரம், 2020 முதல் அதன் பின்னர் பட்டம் பெற்று தொழில் வாய்ப்பு இல்லாத தொழிலற்ற பட்டதாரிகளின் பிரச்சினை குறித்து அமைச்சு இதுவரையில் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தவில்லை.
இதேநேரம் ஜனாதிபதி செயலகமோ, பிரதமர் அலுவலகமோ இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்பது இன்றைய (நேற்று) சந்திப்பில் எங்களுக்கு புலனாகியது.
எனவே, இந்த தொழிலற்ற பட்டதாரிகள் பிரச்சினை போல ஏனைய பிரச்சினை உள்ள அனைத்து தரப்பினர் தொடர்பிலும் தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்க வேண்டும். நாட்டில் கொவிட் பரவல் நிலைமைக்கு மத்தியில் சமூக வலைதளங்களின் மூலமாகவும்,
அமைச்சுடன் இடம்பெறுகின்ற சந்திப்பு தொடர்பிலும் நாங்கள் இதுபோன்று அறியத்தருகின்றோம். எனவே தொடர்ந்தும் தங்களுடன் இணைந்து இருக்குமாறு ஒன்றிணைந்து வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் இணைப்பாளர் தென்னே ஞானாநந்த தேரர் தெரிவித்துள்ளார்.