டெல்டா வைரஸ் திரிபு இலங்கையில் முதல் முறையாக சமூகத்தில் கண்டறியப்பட்டுள்ளது
இந்தியாவில் மிகவேகமாக பரவிவரும் வீரியம் கொண்ட B.1.617.2 என்ற டெல்டா கொரோனா வைரஸ் திரிபு தொற்றுறுதியான நபர்கள் முதல் முறையாக சமூகத்தில் கண்றியப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
கொழும்பு - தெமட்டகொடை பகுதியில் இந்த வைரஸ் தொற்றுறுதியான ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வைரஸ் திரிபு, B.117 திரிபைக்காட்டிலும் 50 மடங்கு பரவல் வேகம் கொண்டது என கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.