'4000 கன்டெய்னர் லாரிகள் சேவையில் இருந்து விலகின'

'4000 கன்டெய்னர் லாரிகள் சேவையில் இருந்து விலகின'

டீசல் பற்றாக்குறையால் சுமார் 4000 கொள்கலன் பாரவூர்திகள் இனி இயங்காது என ஐக்கிய இலங்கை கொள்கலன் கார் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நாட்டிற்கு அன்றாடம் தேவைப்படும் உணவு, மருந்து மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது என்றார்.

சுமார் 6000 கன்டெய்னர் லாரிகள் உள்ளதாகவும், அவற்றில் 2000 மட்டுமே இயங்குவதாகவும் அவர் கூறினார்.

பொருட்களை ஏற்றிச் செல்லும் கொள்கலன்கள் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் இயங்கி வருவதால் வெளிமாவட்டங்களுக்கு பொருட்களை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சரக்கு போக்குவரத்து சேவைகள் முற்றிலும் கொள்கலன் பாரவூர்திகள் மூலம் மேற்கொள்ளப்படுவதாகவும், அந்த சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image