சுற்றுலா விசாவில் தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவது தொடர்பில் தேவையான தகவல்களை வழங்காத 400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களின் அனுமதிப்பத்திரங்கள் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார் தெரிவித்துள்ளார்.
03.12.2022 சனிக்கிழமை பாராளுமன்றத்தில், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரின் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன் இலங்கைக்கு டொலர்களை உண்டியல் முறை மூலம் இலங்கைக்கு கொண்டு வந்த முகவர் நிறுவனங்களுக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
Gagana