பண்டிகைக் காலத்தில் ஒரு கிலோ அரிசியின் விலை 300 ரூபா?

பண்டிகைக் காலத்தில் ஒரு கிலோ அரிசியின் விலை 300 ரூபா?

பண்டிகைக் காலத்தில் அரிசி கிலோ ஒன்றின் விலை 300 ரூபா வரை அதிகரிக்கலாம் என்று தெரிவித்துள்ள ஐக்கிய அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் அரிசி வாங்குவதற்கும் வரிசையில் நிற்கவேண்டியேற்படலாம் என்று அச்சம் வௌியிட்டுள்ளது.

நாட்டிலுள்ள 95 வீதமான சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலைகளை அதன் உரிமையாளர்கள் தற்போது மூடியுள்ளனர் என்று” அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித்த பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

 

ஓகஸ்ட் மாதத்திற்கு பிறகு 5கிலோ கிறாம் மற்றும் 10 கிலோ கிறாம் அரிசி பைக்கற்றுகளுக்குப் பதிலாக சிறிய பைக்கற்றுக்களில் அரிசியை வாங்கும் நிலைக்கு நுகர்வோர் தள்ளப்படலாம் என்று தெரிவித்துள்ள முதித்த பெரேரா, URMOA தலைவர் முதித பெரேரா தெரிவித்தார்.

இலங்கையை விட 25% அதிக இரசாயன உரத்தை இந்தியா பயன்படுத்துவதால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி மக்களின் ஆரோக்கியத்தை பாதிக்காதா என அவர் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

இலங்கையுடன் ஒப்பிடுகையில் சீனா 200 வீதம் அதிகமாக இரசாயன உரத்தை பயன்படுத்துகிறது. அரசாங்கம் அரிசி இறக்குமதியை ஆரம்பித்தபோது ஒரு கிலோ உள்ளூர் அரிசியின் விலை 120 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது இதன் விலை 200 ரூபாவாக அதிகரித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட அரிசி கையிருப்புகளை நாடு முழுவதும் ஒழுங்கான முறையில் விநியோகித்தால், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசியின் விலை அதிகரிக்காது என்றும் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை கொள்கலன்களில் பொலன்னறுவைக்கு கொண்டு 180 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image