3 கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் ஆசிரியர்கள் போராட்டம்
சர்வதேச ஆசிரியர் தினம் இன்று இலங்கையில் கொண்டாப்படுகின்ற நிலையில், நாடுதழுவிய ரீதியில் ஆசிரியர் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கமைய, அதிபர் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வை வழங்கும் படியும், பிள்ளைகளின் கல்வி உரிமையை உறுதி செய்யுமாறு போரிய யாழ்ப்பாணத்தில் ஆசிரியர்கள் இன்று பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று முற்பகல்-10 மணியளவில், வடமாகாண கல்வியமைச்சுக்கு முன்பாகவும், யாழ்ப்பாண வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்பாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
'கல்வி நெருக்கடிக்கு தீர்வு வழங்கு', '24 வருட ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு உடனடியாக தீர்வினை வழங்கு', 'கொத்தலாவல சட்டமூலத்தை உடனடியாக ரத்து செய்' ஆகிய மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடைபெற்றது.
கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அதிபர்கள் ஆசிரியர்கள் குறித்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.