சம்பள முரண்பாடு, நிலுகைக் கொடுப்பனவுகள் உட்பட மேலும் சில பிரச்சினைகளுக்கு தீர்வைக்கோரி மலையகத்தில் அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களால் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சர்வதேச ஆசிரியர் தினம் இலங்கையில் இன்று கொண்டாடப்படும் நாளிலேயே, தமக்கான உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் அதிபர், ஆசிரியர்கள் இன்று தொழிற்சங்க போரோட்டத்தில் இறங்கினர்.
அந்தவகையில், நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட அதிபர், ஆசிரியர்கள் நுவரெலியா நகரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். நுவரெலியா தபால் நிலையத்திற்கு பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஹற்றன் நகரத்திலும் அதிபர், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஹற்றன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
வலப்பனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அதிபர், ஆசிரியர்கள் வலப்பனை நகரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். வலப்பனை இலங்கை வங்கி கிளைக்கு முன்னாள் பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.]
நுவரெலியா
ஹற்றன்
வலப்பனை