கடந்த ஐந்து மாதங்களில் 288645 கடவுசீட்டுகளை பெற்றுக்கொண்டுள்ளனர்!

கடந்த ஐந்து மாதங்களில் 288645 கடவுசீட்டுகளை பெற்றுக்கொண்டுள்ளனர்!

இந்த வருடத்தின் (2022) முதல் ஐந்து மாதங்களில் 288,645 பேர் தமது கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொண்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரான குடிவரவு மற்றும் குடியகல்வு பிரதி கட்டுப்பாட்டாளர் பியூமி பண்டார தெரிவித்தார்.

ஊடகப் பேச்சாளர் பியூமி பண்டாரவின் கூற்றுப்படி, 2021 ஆம் ஆண்டில் 382,506 கடவுச்சீட்டுகள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து பலர் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடியுள்ளதாகவும், இதனால் அதிகமானோர் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவ்வருடம் ஜனவரியில் 52,278, பெப்ரவரியில் 55,381, மார்ச்சில் 74,890, ஏப்ரலில் 53,151, மே மாதத்தில் 52,945 என கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் செயற்பாடுகளுக்காக வருபவர்கள் தங்களுக்கான திகதி மற்றும் நேரத்தை பெற்றுக் கொண்டு வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.

நாளாந்தம் முன்பதிவு செய்யாதவர்களின் வருகையால் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தைச் சுற்றி பல கிலோமீற்றர் தூரம் வரிசைகள் காணப்படுவதாகவும், முன்பதிவை மேற்கொண்வர்களில் நாளாந்தம் 1500க்கும் அதிகமானோருக்கு தமது காரியாலத்தின் ஊடாக சேவைகள் பெற்றக் கொடுக்கப்படுவதாவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் மாத்திரம் ஒருநாள் சேவை ஊடாக கடவுச்சீட்டு வழங்கப்பட்டு வருவதாகவும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுகளை பெறுவதற்கு தேவையான ஆவணங்களை தலைமை அலுவலகத்திற்கு மேலதிகமாக மாத்தறை, குருநாகல், கண்டி, மாத்தறை மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் உள்ள அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image