பயங்கரவாத தடுப்பு திருத்த சட்டமூலம்: இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 22 ஆம் திகதி

பயங்கரவாத தடுப்பு திருத்த சட்டமூலம்: இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 22 ஆம் திகதி

பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை எதிர்வரும் 22 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் நேற்று (16) கூடிய பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவுக்குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

எதிர்வரும் 22 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு பாராளுமன்ற சபை அமர்வு ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், அன்றைய தினம் முற்பகல் 11 மணி தொடக்கம் மாலை 4.30 வரை சட்டமூலம் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளது.

அன்றைய தினம் திருத்தங்களுடன், பயங்கரவாத தடுப்பு தற்காலிக ஏற்பாடுகளுக்கான திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்ள தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவு / கடமைப் பட்டியல் பற்றிய அறிவித்தல்

மலையக தமிழர் அபிலாசைகள் ஆவணம் ஜப்பானிய தூதுவரிடம் கையளிப்பு

அரச ஊழியர்களிடமும், பொதுமக்களிடமும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ள விடயம்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image