அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவு / கடமைப் பட்டியல் பற்றிய அறிவித்தல்
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் / அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவை வழங்குதல் மற்றும் கடமைப் பட்டியலுக்கு அமைய சேவை வழங்குதல் என்பது தொடர்பில் உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் கே.பி.தர்மதிலக்கவினால் இன்று (15) இந்த சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள விடயம் தொடர்பில் பிரதேச செயலாளர்கள் தற்போது வரையில் மேற்கொண்டுள்ள நடவடிக்கை மற்றும் அதன் தற்போதைய நிலைமை தொடர்பில் கீழே உள்ள இணைப்பின் ஊடாக குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தின் மூலம் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் எனக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு இதனூடாக அறியத்தருகின்றேன்.
இது தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டு, மார்ச் மாதம் 25ஆம் திகதிக்கு முன்னர் உரியவாறு அறிக்கையை முன்வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
சிங்கள மொழியில் குறிப்பிடப்பட்டுள்ள அந்தப் படிவம் கீழே தரப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் முறைப்பாடுகளைப் பதிவு செய்ய இணையத்தளம் அங்குரார்ப்பணம்