தற்போது டெங்கு ஒழிப்பு உதவியாளர்களாக கடமையாற்றும் 332 ஊழியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மேலும் ஒரு வருட கால நீடிப்பு வழங்கப்படுவதாக சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில்; 2 திறமை சித்திகளுடன் 6 பாடங்களில் சித்தியடைந்தவர்கள் டெங்கு ஒழிப்பு உதவியாளர்களாக உள்வாங்கப்பட்டுள்ளனர். 8 வருடங்களாக சேவையில் இருக்கும் இவர்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ரோஹினி கவிரத்ன நேற்று முன்தினம் (21) கேட்ட வாய்மூலக் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த உதவியாளர்களின் ஒப்பந்த காலத்தை மீண்டும் ஒக்டோபர் மாதம் நீடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்;.
இவ்வருடம் டெங்கு நோயாளர்கள் மற்றும் உயிரிழப்புக்கள் குறைந்துள்ளதாகவும், டெங்கு ஒழிப்புக்காக செயற்படும்;; அனைவரினதும் ஆதரவே இந்த குறைவிற்கு காரணம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.