இன்று இரண்டு வாரங்களுக்கு முதல் ஆசிரியர் - அதிபர்கள் புறக்கணிக்கும் பணிகள் எவை?

இன்று இரண்டு வாரங்களுக்கு முதல் ஆசிரியர் - அதிபர்கள் புறக்கணிக்கும் பணிகள் எவை?

இன்று (22) முதல் இரண்டு வாரங்களுக்கு சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இதன்படிஇ பாடசாலை கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நடவடிக்கையில் மாத்திரம் அதிபர் - ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பாடசாலை கற்பித்தல் செயல்பாடுகளுக்கு அப்பால்இ வலய கல்விப் பணிமனை மற்றும் மாகாண கல்வித் திணைக்களம் ஆகியவற்றினால் அழைக்கப்படும் கூட்டங்கள் மற்றும் செயற்பாடுகளில் ஆசிரியர் அதிபர்கள் தொடர்பு பட மாட்டார்கள் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

குறித்த காலப்பகுதியில் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மாணவர்களின் கற்பித்தல் செயல்பாடுகளில் ஈடுபடுவதுடன்இ விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் ஆசிரியர் - அதிபர்கள் பங்கேற்பர். ஆனால் பிற்பகல் 1.30 மணியின் பின்னர் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து பணிகளில் இருந்தும் விலகி இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையான காலப்பகுதியில் மாணவர்களின் கற்பித்தல் செயல்பாடுகள் தவிர்த்து ஜனாதிபதி செயலகம் அல்லது சுகாதார அமைச்சு ஆட்பதிவுத்திணைக்களம் என அனைத்து பணிகளில் இருந்தும் விலகுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த இரண்டு வாரகாலத்தில் அரசியல்வாதிகள் பங்கேற்கும் எந்த ஒரு நிகழ்விலும் அதிபர் ஆசிரியர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image