பால்நிலைச்சார் ஊதிய இடைவௌிகளை குறைக்க கணக்கெடுப்பு

பால்நிலைச்சார் ஊதிய இடைவௌிகளை குறைக்க கணக்கெடுப்பு

இலங்கை பாராளுமன்றத்தில் உள்ள பெண்கள் பேரவையானது பால்நிலைச்சார் சம்பள இடைவெளிகளை குறைப்பதற்கான சட்டத்தை கொண்டு வரும் நோக்கத்துடன் ஒரு கணக்கெடுப்பை ஆரம்பித்துள்ளது என்று குழுவின் தலைவியும் பாராளுமன்ற உறுப்பினருமான டொக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

இக்கணக்கெடுப்பினூடாக இலங்கையில் காணப்படும் பால்நிலை அடிப்படையிலான இடைவௌிகள் காணப்படும் இடைவௌிகளை அடையாளங்காண உதவியாக இருக்கும் என்று பெர்ணாண்டோபுள்ளே பெண்களை வலுவூட்டும் வகையில் நிறைவேற்றப்படவுள்ள சட்டம் தொடர்பான விவாதம் பாராளுமன்றில் இடம்பெற்றபோது தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் அரசாங்க தொழில்களில் சம்பளம் இரு பாலினத்தவர்களுக்கும் சமமானதாக காணப்பட்டபோதிலும் கூட தனியார் நிறுவனங்களில் அவ்வாறில்லை. ஒரே தொழிலை செய்யும் போதும் ஆண்களை விடவும் பெண்களுக்கு சம்பளம் குறைவாகவே வழங்கப்படுகிறது. மேல்முறையீடுகளால் மட்டும் சமத்துவம் கிடைக்காது, சட்டம் அவசியம். இலவச கல்வி, இலவச மருத்துவம் என்பவற்றின் காரணமாக எமது பெண்கள் எந்தளவு முன்னேற்றமடைந்திருந்தாலும் கூட தொழில் ரீதியாக அவர்களின் பங்களிப்பு வெறுமனே 35 சதவீதமாகவே காணப்படுகிறது.

அரச நிறுவனங்களில் சமமான வேதனம் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் கூட, தீர்மானம் எடுக்கும் பதவிகளில் பெண்கள் இன்னும் மிகவும் குறைவாகவே உள்ளனர். குறிப்பாக தீர்மானம் எடுக்கும் பதவிகளில் ஆண்கள் அதிகமாக இருக்கும் அரசியல்கட்சிகளில் பங்களிப்பு மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.
என்று அவர் கூறினார்.

அரசியல் கட்சிகளின் பொதுச் செயலாளர்களுடனான கலந்துரையாடலில் அவர்களின் கட்சி யாப்பினை திருத்தி 25 வீத பெண்களிப்பை அதிகரிக்கும் வகையில் மாற்றுமாறு கோரியுள்ளோம். அவர்களின் வேட்புமனுச்சபை பெண்களை உள்வாங்குவதில்லை. 33 வீதம் பெண்களை தீர்மானம் எடுக்கும் பதவிககளில் உள்வாங்குவது குறித்து கவனம் செலுத்துமாறு கோரியுள்ளோம்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலப்பகுதியில் மாகாணசபைகளில் 25 வீத பெண்களின் பங்களிப்பை அறிமுகப்படுத்தினார். அவருக்கு நன்றி கூறவேண்டும். இன்று சிறந்த ஆளுமையுள்ள 23 வீத பெண்கள் மாகாணசபைகளில் அங்கம் வகிக்கின்றனர். இதே ஒதுக்கீட்டை நாம் பாராளுமன்றிலும் எதிர்பார்க்கிறோம்.

29 அங்கத்தவர்களில் குறைந்தது 50 வீதமான பெண்கள் தேசிய பட்டியலில் உள்வாங்கப்படவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image
© 2024 Wedabima.lk. All Rights Reserved
Design by Vishmitha.com