பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேதன பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேதன பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேதன பிரச்சினைக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண கல்வி அமைச்சரும், அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

கல்விசாரா ஊழியர்களின் வேதனம் 15 சதவீதத்தால் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதுவரையில் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காமையால் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ்.பிரியந்த தெரிவித்துள்ளார்.

அதன்படி, வாரத்திற்கு ஒருமுறை பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம் - சூரியன் செய்திகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image