சுகாதார சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு - நிதி அமைச்சின் செயலாளர் இடையே கலந்துரையாடல்

சுகாதார சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு - நிதி அமைச்சின் செயலாளர் இடையே கலந்துரையாடல்

சுகாதார சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் நிதி மைச்சின் செயலாளருக்கு இடையில் இன்று(06) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. 

நிதி அமைச்சில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

சம்பளம் மற்றும் கொடுப்பனவு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

சுகாதார ஊழியர்கள் முகங்கொடுத்துள்ள சம்பளம் மற்றும் கொடுப்பனவு பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி அவர்கள் அண்மையில் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பொது சுகாதார பரிசோதகர்கள், ஆய்வுகூட வல்லுநர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறையைச் சேர்ந்த 72 தொழிற்சங்கங்களை சுகாதார சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image