ஒழுக்கமான ஊடகக் கலாசாரத்தை ஏற்படுத்தும் தேசிய கொள்கை அடுத்த ஆண்டில் நடைமுறை

ஒழுக்கமான ஊடகக் கலாசாரத்தை ஏற்படுத்தும் தேசிய கொள்கை அடுத்த ஆண்டில் நடைமுறை

ஒழுக்கமான ஊடகக் கலாசாரத்தை ஏற்படுத்தும் தேசிய கொள்கையொன்றிற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை அடுத்த வருடத்திலிருந்து நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அண்மையில் இடம்பெற்ற வெகுசன ஊடக அமைச்சின் செலவு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோது மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் தெரிவிக்கையில்,

மின்னியல் அதிகாரசபை சட்டத்தில் தீங்கு விளைவிக்கும் எதுவும் இல்லை. அச்சட்டத்தின் ஊடாக மூன்றாம் தரப்பிற்கு ஏற்படும் பல்வேறு தவறுகள் மற்றும் அநீதியான சந்தர்ப்பங்களில் அதற்காக தலையிட்டு உதவி செய்வதற்காக இச்சட்டம் பயனளிக்கும் என்கிறார்.

வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் இரண்டும் தேசிய ரீதியாக கொண்டு வரப்படுவதன் நோக்கத்தை அடைய வேண்டும் என்பதற்காக, அந்நிறுவனங்கள் இரண்டையும் ஒன்றிணைப்பதற்காக துறை சார்ந்தவர்களின் குழுவொன்றை நியமிப்பதாகவும் தெரிவித்தார். அதனூடாக இந்நிறுவனங்களில் வளங்களை நன்றாக முகாமைத்துவம் செய்ய முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும் தொலைக்காட்சியை டிஜிட்டல் மயப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டம் எதிர்வரும் வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படவிருப்பதாக அமைச்சர் விபரித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image