20,000 ரூபா கொடுப்பனவுக்கான யோசனை இன்று நிறைவேற்றப்படாவிட்டால் வேலைநிறுத்தம்

20,000 ரூபா கொடுப்பனவுக்கான யோசனை இன்று நிறைவேற்றப்படாவிட்டால் வேலைநிறுத்தம்
அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபாய் கொடுப்பனவை வழங்கும் யோசனை இன்று (13) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாவிட்டால் வேலை நிறுத்தத்தை ஆரம்பிக்க உள்ளதாக அரசு மற்றும் மாகாண அரச சேவைகள் தொழிற்சங்க ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபாய் கொடுப்பனவை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் நேற்று (12) முன்னெக்கப்பட்ட வேலை நிறுத்தம் வெற்றியளித்துள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவைகள் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
 
எனவே  குறித்த பிரச்சனையை தீர்ப்பதற்காக யோசனையை இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றாவிட்டால் எதிர்காலத்தில் வேலைநிறுத்தம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அந்த ஒன்றியத்தின் உறுப்பினரும் தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் பிரதி செயலாளருமான சந்தன சூரிய ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image