அரச ஊழியர்களுக்கான அறிவித்தல் ஒன்றை, ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் வௌியிட்டுளளது.
அந்த மத்திய நிலையும் வௌியி்ட்டுள்ள பேஸ்புக் பதிவில்
*20,000 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு
*தொழில் ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாமைக்கு
*ஓய்வூதியம் வெட்டப்படுகின்றமைக்கு
*மக்களின் நலன்புரி கொடுப்பனவுகள் வெட்டப்படுகின்றமைக்கு
*அரசாங்கத்தின் முடிவுகளை அரச ஊழியர்கள் மீது சுமத்துவதற்கு
*அநீதியான தொழில் சட்ட மறுசீரமைப்புக்கு
எதிராக ஜூலை 17/18/19 ஆம் திகதிகளுக்கு திகதிகளில் அரச காரியங்களுக்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் தீர்மானித்துள்ளது.
அந்த மத்திய நிலையும் பேஸ்புக் பதிவில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.