அரச ஊழியர்கள் விடுமுறை தொடர்பான அறிவிப்பு!

அரச ஊழியர்கள் விடுமுறை தொடர்பான அறிவிப்பு!

அரச ஊழியர்கள் சம்பளம் இன்றி விடுமுறை எடுப்பது தொடர்பான சுற்றரிக்கையை பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இன்று வௌியிட்டுள்ளார்.

விடுமுறை பெறும் ஊழியர்கள் வௌிநாடுகளுக்கு செல்லவும் உள்நாட்டிலேயே தங்கியிருக்கவும் முடியும் என்றும் அவ்வாறு விடுமுறைப் பெறும் அரச ஊழியர்களுடைய பதவியுயர்வு மற்றும் ஓய்வூதியம் என்பவற்றுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது என்றும் அச்சுற்றரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றதையடுத்து 14/ 2022 (111) - ஜூலை 13 2023 என்று திகதியிடப்பட்ட சுற்றுநிருபம் பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கே. டி. என். ரஞ்சித் அசோக்கவின் கையெழுத்துடன் வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி - டெய்லி மிரர்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image