தொழில் உரிமைகளை மறுக்கும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை - ஜீவன்

தொழில் உரிமைகளை மறுக்கும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை - ஜீவன்
பெருந்தோட்ட தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் வகையிலும், அவர்களுக்கான தொழில் உரிமைகளை வழங்குவதற்கு மறுக்கும் வகையிலும் செயற்படும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹட்டன் பிராந்திய பெருந்தோட்ட கம்பனியுடன் நடைபெற்ற சந்திப்பின்போது தாம் எச்சரிக்கை விடுத்ததாக அமைச்சர்  ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் தமது பேஸ்புக் பக்கத்தில் வௌியிட்டுள்ள பதிவில்,
 
ஹட்டன் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிக்குட்பட்ட தோட்டங்களில் நீண்டகாலமாக நிலவும் தொழில் பிணக்குகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான கூட்டமொன்று எனது தலைமையில் கொழும்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனில் நடைபெற்றது.
 
இ.தொ.காவின் சார்பில் என்னுடன், தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், தேசிய அமைப்பாளர் ஏ.பி.சக்திவேல், உப தலைவர் பாரத் அருள்சாமி, சிரேஷ்ட சட்ட ஆலோசகர் மாரிமுத்து, தொழிற்சங்க தேசிய அமைப்பாளர் லோகதாஸ், கட்சி போஷகர் சிவராஜா, தோட்ட கமிட்டி தலைவர்களும், ஹட்டன் பிராந்திய பெருந்தோட்ட கம்பனி சார்பில் அதன் நிறைவேற்று முகாமையாளர் வருண மற்றும் தோட்ட முகாமையாளர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
 
இதன்போது தொழில் பிணக்குகளுக்கு விரைவில் தீர்வுகளை வழங்குவது பற்றி ஆராயப்பட்டுள்ளது.
 
பெருந்தோட்ட தொழிலாளர்களின் உழைப்பை மாத்திரம் சுரண்டிக்கொண்டிருக்கும் தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தீர்வை வழங்காவிட்டால் ஹட்டன் பெருந்தோட்ட கம்பனிக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என நான் எச்சரித்தேன்.
 
இந்நிலையில் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என தோட்ட நிறுவன தரப்பில் என்னிடம் உறுதியளிக்கப்பட்டது. - எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
May be an image of 5 people, people studying and text
 
May be an image of 9 people, people studying and text
 
May be an image of 5 people and dais
 
May be an image of 6 people and people studying
 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image