தொழில் சட்டம்- தவறான தகவல் பரப்புவோருக்கு எதிராக முறைப்பாடு!

தொழில் சட்டம்- தவறான தகவல் பரப்புவோருக்கு எதிராக முறைப்பாடு!

தற்காலத்துக்கு ஏற்றாற்போல் தொழிற்சட்டங்களை திருத்துவது தொடர்பில் மக்கள் கருத்துக்கள் பெறும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுவது குறித்து பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்று  தொழில் ஆணையாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

ஒரு நூற்றாண்டு கால வரலாற்றுக்கு உரிமைகோரும் இலங்கையின் தொழில் சட்டத்தை நவீன உலகத்திற்கு ஏற்றவகையில் மாற்றுவதற்காக ,பொது மக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் பணியை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தற்போது ஆரம்பித்துள்ளது. அது தொடர்பான சட்ட மூலத்திற்கான பணி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.

இருப்பினும் பொது மக்களின் கருத்துக்களை பெறும் போது , மக்களை தவறாக வழிநடத்தும் தகவல்கள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன. இவ்வாறான உண்மைக்குப்புறம்பான பிரசுரங்களினால் பொது மக்கள் மத்தியில் தொழில் சட்டம் குறித்து தவறான நிலை ஏற்படக்கூடும். இதனால் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவோர் தொடர்பில் உடனடியாக கண்டறியுமாறு தொழில் ஆணையாளர் பிரபாத் சந்திரகீர்த்தி ,பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image
© 2024 Wedabima.lk. All Rights Reserved
Design by Vishmitha.com