பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு: கல்வி அமைச்சின் புதிய அறிவித்தல்
உயர்தரப் பரீட்சை, விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தொடர்பில், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சாதகமான பதிலை வழங்குவார்கள் என எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக, 19 ஆயிரம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
எனினும், 12 ஆயிரம் மதிப்பீட்டாளர்கள் மாத்திரமே விண்ணப்பித்துள்ளதாக கல்வி அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.