இலங்கை ஆசிரியர் சங்கம் யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் இன்று (15) யாழ்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை .முன்னெடுத்தனர்.

சம்பள அதிகரிப்பை வழங்க கோரியும் வரி அறவீட்டினை நிறுத்த கோரியும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைகளில் பதாகைகளை தாங்கியவாறு 20000 உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மூன்றில் இரண்டு பங்கு சம்பளத்தை வழங்க வேண்டும்., மாணவர்களின் போதனை குறைபாட்டை நிவர்த்தி செய்!, பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களை கொடு உள்ளிட்ட பல்வேறு பதாகைகளை தாங்கியவாறு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

போராட்டத்தில் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரும் கலந்து கொண்டனர். குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அதிபர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

20230315 101626

20230315 101220

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image