ஆசிரியர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்கள் தேசிய சேமிப்பு வங்கியில் பெற்ற கடனுக்கான வட்டியை திடீரென அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வர்த்தக வங்கிகளில் வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளதால் கடனுக்கான வட்டி விகிதம் 9 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய சேமிப்பு வங்கி வாடிக்கையாளர்களுக்கு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி என்பனவும் ஜனவரி மாதம் முதல் கடன் வட்டி வீதத்தை உயர்த்துவதற்கு முன்னர் தீர்மானம் எடுத்திருந்ததோடு தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக அதனை நிறுத்தியுள்ளன.