தற்போது, பல்வேறு சிறப்பு தேவைகள் மற்றும் பண்டிகைகளுக்காக அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பொது விடுமுறையை குறைப்பது குறித்து அரசு கவனம் செலுத்தி வருகிறது.
பொதுமக்களின் அத்தியாவசிய கடமைகளை தாமதமின்றி நிறைவேற்றும் வகையில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்படி பொது விடுமுறை நாட்களை குறைத்து வேலை நாட்களை அதிகரிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார். மேலும் இதுகுறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதன்மூலம் அரசு சேவையை வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதுடன், பொதுமக்கள் காலதாமதமின்றி அரசு சேவையை பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.