இன்று முதல் மறு அறிவித்தல்வரை, 42 ரயில் சேவைகளை இரத்துச் செய்ய மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் கைவிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
பணிக்குழாம் உறுப்பினர்களின் பற்றாக்குறை காரணமாக, அலுவலக மற்றும் சாதாரண ரயில் சேவைகள் இன்று முதல் மறு அறிவித்தல்வரை இரத்துச் செய்யப்பட உள்ளதாக ரயில்வே திணைக்களம் நேற்று அறிவித்திருந்தது.
இதன்படி, பிரதான மார்க்கத்தில 20 ரயில் சேவைகளும், கரையோர மார்க்கத்தில் 16 ரயில் சேவைகளும், புத்தளம் மார்க்கத்தில் 4 ரயில் சேவைகளும், களனிவெளி மார்க்கத்தில் 2 ரயில் சேவைகளும் இரத்துச் செய்யப்பட உள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டிருந்தது.

எவ்வாறிருப்பினும், ரயில் சேவைகளை இரத்துச் செய்தல் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட உள்ளதால், அந்தத் தீர்மானம் கைவிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்., ரயில் சேவைகளை இரத்துச் செய்தல் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட உள்ளதால், அந்தத் தீர்மானம் கைவிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.