மோசடியான அழைப்புகள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல் செய்திகள் மற்றும் சமூக ஊடக வலையமைப்பைப் பயன்படுத்தி தனி நபர்களிடமிருந்து பணத்தை மோசடி செய்தல் குறித்து இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மோசடியான தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல் செய்திகள் மற்றும் சமூக ஊடக வலையமைப்புகள் மூலம் தவறான தகவல்களைத் தந்து, அவர்களை வெளிநாட்டு வேலைகளுக்கு அழைத்துச் செல்வதாக உறுதியளித்து அல்லது பல்வேறு மதிப்புமிக்க பொருட்களைக் கொண்ட பொதிகளைப் பெறுவதற்கு சுங்க வரி செலுத்துமாறு கூறி தனிநபர்களிடமிருந்து பணத்தை மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சமீப காலமாக அதிளவான புகார்கள் பதியப்பட்டுள்ளடாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, முறையான தகவல்கள் மற்றும் சரிபார்ப்பு இன்றி மேற்கண்ட தகவல்களின் அடிப்படையில் தெரியாத தரப்பினரின் வங்கிக் கணக்குகளில் பணத்தை வைப்பிலிடுதலோ அல்லது வேறு வழிகளில் பணத்தை அனுப்பவோ வேண்டாம் என நிதிப் புலனாய்வுப் பிரிவு பொதுமக்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளது.