நிர்ப்பந்தித்தால் ஆடைக் கொடுப்பனவு வழங்குங்கள் - இலங்கை ஆசிரியர் சங்கம்

நிர்ப்பந்தித்தால் ஆடைக் கொடுப்பனவு வழங்குங்கள் - இலங்கை ஆசிரியர் சங்கம்

சுற்றுநிருபத்தினூடாக ஆசிரியர்களுக்கான ஆடை கட்டாயமாக்கப்படுமாக இருந்தால், அவர்களுக்கு ஆடைக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பொது ஊழியர்களுக்கு வசதியான உடையில் பணிக்கு வர வேண்டும் என வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை தன்னிச்சையாக மாற்ற அரசு முயற்சிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்கள் வசதியான உடையில் வேலைக்குச் செல்லும் வாய்ப்பைப் பயன்படுத்தக் கூடாது என்றால், அது அனைவருக்கும் பொதுவான முடிவாக மாற வேண்டும். அவ்வாறின்றி தன்னிச்சையாக மாற்றங்களைச் செய்தால், அதற்கெதிராக சட்டத்தை நாட வேண்டியேற்படும் என்றும் ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

“ஆசிரியைகள் சேலை அணிவதில் எவ்வித பிரச்சினையும் இப்போதும் இல்லை. எதிர்காலத்திலும் இருக்கப்போவதில்லை. எனினும் கட்டாயம் அணியவேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுமாக இருந்தால் அவர்களுக்கான சீருடை கொடுப்பனவு வழங்குவது அவசியமாகும். ஆசிரியைகள் அவர்களின் விருப்பத்திற்கு சேலை அணிவதானால் அது பிரச்சினையல்ல. ஆனால் நிர்ப்பந்தித்தால் அதற்கான கொடுப்பனவை வழங்கட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image