ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கு புதிய முறைமை: கல்வி அமைச்சர் அறிவிப்பு

ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கு புதிய முறைமை: கல்வி அமைச்சர் அறிவிப்பு

எதிர்காலத்தில் ஆசிரியர் ஆட்சேர்ப்பு முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிட்டபோது மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்ட அவர், மேலும் தெரிவிக்கையில்,

தேசிய கல்வியல் கல்லூரிகள் மூலமாகவும், போட்டிப் பரீட்சை மூலமாகவும் இரண்டு முறைமைகளில் ஆசிரியர் ஆட்சேர்ப்பு இடம்பெறுகின்றது.

இந்த நிலையில், அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக ஆட்சேர்க்கப்பட்டுள்ள பயிலுநர் பட்டதாரிகளுக்கு, போட்டிப் பரீட்சை நடத்தி ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இறுதித் தடவையாக இவ்வாறு பரீட்சை நடத்தி ஆசிரியர் ஆட்சேர்ப்பு இடம்பெறும்.

இதன்பின்னர், எதிர்காலத்தில், 19 கல்வியற் கல்லூரிகளையும் இணைத்து உருவாக்கப்படவுள்ள தேசிய கல்வியல் பல்கலைக்கழகத்தில், 4 வருட பட்டப்பட்டிப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சியின் பின்னர் ஆசிரியர் ஆட்சேர்ப்பு இடம்பெறும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்தி வேறு ஆடைகளில் பாடசாலைக்கு சமுகமளித்த ஆசிரியைகள் தொடர்பில் விசாரணை

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image