அரசாங்கத்தை மாற்றும் இன்னுமொரு போராட்டத்திற்கு இடமளிக்கமாட்டேன் - ஜனாதிபதி
அரசாங்கத்தை மாற்றுவதற்கு இன்னுமொரு போராட்டம் நடத்த முயற்சித்தால் நான் அதற்கு இடமளிக்கமாட்டேன். இராணுவம் பயன்படுத்தப்படும். அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்படும். கடந்தமுறையைப் போன்று செய்ய இடமளிக்கப்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (23) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
வியட்நாமின் டீன் டீயம் மாதிரியான ஆட்சிக்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும், அவ்வாறு முயற்சி செய்தால் அதனைத் தடுப்பதற்கு இராணுவம் மற்றும் அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்து நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். இன்று ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய முழுமையான உரை
மே 9ஆம் திகதி சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் விசாரணைகள் நடக்கின்றன. ஆளும் தரப்பினரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்பது குறித்தும் விசாரணைகள் நடக்கின்றன. இதில் மறுபக்கத்தையும் பார்க்க வேண்டும். ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மிலேச்சத்தனமாக வீதியில் வைத்துக் கொல்லப்பட்டார். ‘கோட்டா கோ ஹோம்’ என்று முதலில் சொன்ன பாராளுமன்ற உறுப்பினர் 99 இல் தப்பிக் கொண்டார்.
தீயிட்டனர். இதனை எப்படி அனுமதிப்பது. இதனை நான் முழுமையாக எதிர்க்கிறேன். அதற்கு முன்னர் ஒரு பாராளுமன்ற உறுப்பினருடன் பேசிக்கொண்டிருந்தேன். அரசாங்கத்தைக் கவிழ்க்க வேண்டும் என்று அவர் கூறினார். ஒருவரை ஒருவர் கொலை செய்வதில் எவ்விதப் பயனும் இல்லை. அந்த அரசியல் அத்துடன் முடிந்து விட்டது.
வீடுகள் எரிக்கப்பட்டன. அலரி மாளிகை செல்லாதவர்களின் வீடுகளும் எரிக்கப்பட்டன. பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி, ஆளும் கட்சி உறுப்பினர்கள் எவராக இருந்தாலும் அவர்களின் வீடுகள் எரிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. இந்த உறுப்பினர்கள் வானத்தில் இருந்து விழவில்லை. உறுப்பினர்களுள் நல்லவர்கள், கெட்டவர்கள் என இரு தரப்பினரும் இருக்கின்றனர்.
பாராளுமன்றத்திற்கு 196 உறுப்பினர்கள் வாக்காளர்களினாலேயே தேர்தெடுக்கப்பட்டனர். எனவே, அவர்களின் பணிகளை முன்னெடுக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். இவர்களை விடவும் சிறந்தவர்கள் வேண்டும் என்று கேட்கின்றனர். இப்படி சில சிவில் அமைப்பினர் கோருகின்றனர். அவர்களை முன்வருமாறு கேட்டால் பின்வாங்குகின்றனர். அரசியலுக்குச் சென்று வீடுகளை எரித்துக் கொள்ள வேண்டாம் என்று மனைவி கூறுவதாக சொல்கிறார்கள். அப்படியெனில் யார் முன்வருவது. தொகுதியில் சண்டித்தனம் செய்யும் ஒருவராலேயே போட்டியிட முடியும். இவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். நட்ட ஈடு வழங்க வேண்டும்.
ஜூலை 9ஆம் திகதி என்ன நடந்தது. ஜனாதிபதி விரட்டியடிக்கப்பட்டார். ஜனாதிபதி மாளிகைக்கு என்ன நடந்தது? ஜனாதிபதி மாளிகையை சேதப்படுத்தியுள்ளனர். ஜனாதிபதி அலுவலகத்தைக் கைப்பற்றினார்கள். தரையில் அமர்ந்துகொண்டனர். அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார்கள். அன்று கூறிய அனைத்தும் என்னிடம் இருக்கிறது. வெளிநாட்டு ஊடகங்களுக்கு பேட்டியளித்தனர். என்னை பதவி விலகுமாறு கூறி எனது வீட்டை எரித்தார்கள். நான் எப்படி விலக முடியும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தது.
எதிர்தரப்பு சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்து, பெரும்பான்மையை நிருபித்திருந்தால் என்னால் பதவி விலகியிருக்க முடியும்.
பாராளுமன்றத்தைக் கைப்பற்ற 13ஆம் திகதி வந்தனர். பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றிய பின்னர் பாராளுமன்றத்தைக் கைப்பற்ற வந்தனர். பாராளுமன்றத்தைக் கைப்பற்றியிருந்தால் என்ன நடந்திருக்கும். பாராளுமன்றத்தைக் கைப்பற்றிய பின்னர் அவர்களுக்கு விருப்பமானதை அறிவிக்க இருந்தனர். பொம்மை அரசாங்கமொன்றை அமைக்க முயற்சித்தனர். நடந்தது நடந்தது தான். எனினும், இவ்வாறான சக்திகளுக்கு அடிபணியக்கூடாது என்று எதிர்க்கட்சிக்கும் கூறவிரும்புகிறேன்.
மக்கள் அதில் இருக்கவில்லை. நான் இதனை நிறுத்தச் சென்றதாக என்னைத் திட்டினார்கள். என்னைப் போன்ற சர்வாதிகாரி எங்கும் இல்லை என்று வெளிநாட்டு ஊடகங்களுக்கு கூறினார்கள். சந்திரிக்கா அம்மையாரின் உதவியுடன் 17ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டுவந்தேன். 19ஆவது திருத்தத்தையும் நானே கொண்டுவந்தேன். 21ஆவது திருத்தத்தையும் நானே கொண்டுவந்தேன்.
எமது நாட்டின் நிர்வாகத்தை டீன் டீம் ஆட்சிக்குக் கொண்டுசெல்ல விரும்பவில்லை. டீன் டீம்களுக்கும் அவர்களை சுற்றியுள்ளவர்களுக்கும் நான் வாய்ப்பளிக்கமாட்டேன். மீண்டும் போராட்டம் நடத்தப் போவதாக கூறுகிறார்கள். யாருக்கும் எங்கும் கூட்டங்களை நடத்த முடியும். ஜே.வி.பி கூட்டங்களை நடத்தியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் கூட்டங்களை நடத்தியது. பொலிஸ் நிலையத்திற்குச் சென்று அனுமதி பெற்று கூட்டங்களை நடத்துங்கள். வீதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துங்கள். நான் ஹிட்லரைப் போன்ற சர்வாதிகாரி என்று கூச்சலிடுங்கள். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் அனுமதியைப் பெற்று இவற்றை செய்யுங்கள். வீதியில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு விளைவிக்காதீர்கள். வேறு ஒன்றையும் கேட்கவில்லை. ஆனால் நடந்ததைப் போல் இன்னுமொரு போராட்டத்தை நடத்த முடியும் என்று நினைக்க வேண்டாம். அனுமதியின்றி வீதியில் செல்ல முயற்சித்தால் அதனைத் தடுக்குமாறு பொலிசாருக்கு அறிவித்துள்ளோம். ஒவ்வொரு சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு சென்று இதற்காக வாதிடுகின்றனர். அரசாங்கத்தை மாற்றுவதற்கு இன்னுமொரு போராட்டம் நடத்த முயற்சித்தால் நான் அதற்கு இடமளிக்கமாட்டேன். இராணுவம் பயன்படுத்தப்படும். அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்படும். கடந்தமுறையைப் போன்று செய்ய இடமளிக்கப்படாது. - என்றார்.