இலங்கையில் முதலாவது குரங்கம்மை தொற்றியவர் அடையாளங்காணப்பட்டார்!

இலங்கையில் முதலாவது குரங்கம்மை தொற்றியவர்  அடையாளங்காணப்பட்டார்!

இலங்கையில் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவர் அடையாளங்காணப்பட்டதையடுத்து பொது மக்களுக்கு அவசர அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

 இது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவிக்கையில், இலங்கையில் குரங்குக் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்காக விமான நிலையங்கள் மற்றும் ஏனைய இடங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட நபரின் கொப்புளங்களில் இருந்து வெளியேறும் திரவங்களை நேரடியாக தொடுவதன் மூலம் மற்றுமொருவருக்கு தொற்று ஏற்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நிபுணத்துவ பிரிவின் தலைவர் வைத்திய நிபுணர் ஜானகி அபேநாயக்க கூறுகையில், குரங்குக அம்மை காய்ச்சல் ஒரு கொடிய நோயல்ல.

ஆனால் அது பாதிக்கப்பட்ட நபரின் உடல் திரவங்கள் மற்றும் சுவாசத் துளிகள் மூலம் இன்னொருவருக்கு எளிதில் பரவும்.

இந்த நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தொடர்ந்தும் முகக்கவசம் அணிதல் மற்றும் கைகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த முதலாம் திகதி டுபாயிலிருந்து வந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவர் குரங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நபர் தற்போது தொற்றுநோய் (IDH) வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image